வல்லம், மே 13: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நரியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(72). இவர் கடந்த 2024ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு இவருடன் செக்யூரிட்டியாக வேலை பார்த்த நார்த்தேவன் குடிகாடு பகுதியை சேர்ந்த தனிக்கொடி(52) என்பவர் கோவிந்தராஜனிடம் உங்கள் பேரனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி ரூ.60 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் ஒரு வருடமாக வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் தனிக்கொடி இழுத்தடித்து வந்துள்ளார்.
இது குறித்து கோவிந்தராஜன் ேகட்ட போது, தனி கொடியும், அவரது மகன் நவீன் கண்ணன் (27) இருவரும் சேர்ந்து கோவிந்தராஜனை பணம் தர முடியாது எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜன் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பணம் மோசடி செய்த தனிக்கொடி மற்றும் அவரது மகன் நவீன் கண்ணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post அரசு வேலை வாங்கித்தருவதாக முதியவரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி appeared first on Dinakaran.