சென்னை: அமெரிக்கா, கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா பங்கேற்றிருந்தார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 17 வயதான காசிமா 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் . அமெரிக்காவில் நடந்த போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் பங்கேற்றனர். வரும் 21ம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா நாடு திரும்ப உள்ளார்.
இந்நிலையில் உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலக கேரம் போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!” என முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை காசிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.