உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

6 hours ago 2

வாடிகன்: உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 266வது தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

3-வது நாளாக நேற்றும் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது. பின்னர் மாலையுடன் பொதுமக்கள் அஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைந்தது. பின்னர் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்ட பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வாடிகன் நகரில் தொடங்கியது. அவரது உடலுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடி உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து கிறிஸ்துவ பேராயர்கள் பங்கேற்றனர்.

 

The post உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article