கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம்

9 hours ago 2

கரூர், ஏப். 11: கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கிய ஆய்வுகளின் நோக்கும், போக்கும் என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சுதா தலைமை வகித்தார். புதுவை பல்கலைக் கழக சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலம் பேராசிரியர் ரவிக்குமார் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வுகளின் போக்கும், நோக்கும் என்பது குறித்து பேசினார். இந்த கருத்தரங்கின் தலைவராக தமிழாய்வுத்துறை தலைவர் இணைப் பேராசிரியர் கற்பகம், தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியர் சுப்ரமணி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து செயல்பட்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியர் சரவணன், உதவி பேராசிரியர்கள் நீலாதேவி, பெரியசாமி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.

The post கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article