பாகல்அள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் சீரமைப்பு

10 hours ago 4

நல்லம்பள்ளி, ஏப்.11: தினகரன் செய்தி எதிரொலியாக பாகல் அள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நல்லம்பள்ளி ஒன்றியம், பாகல் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகாரம்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்து வந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஏற்கனவே இருந்த பைப் லைன்களை மாற்றி அமைத்து, புதிய பைப் லைன்கள் அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக, தண்டுகாரம்பட்டி கிராமத்தில், ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் சீரான குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின் பேரில், ஊராட்சி செயலாளர் தண்டுகாரம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர் சப்ளையை சீர்செய்யும் வகையில், பல்வேறு இடங்களில் உடைந்த நிலையில் காணப்பட்ட பைப்லைன்கள் மாற்றப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பாகல்அள்ளி ஊராட்சியில் குடிநீர் குழாய் சீரமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article