உலக அளவில் ரூ.500 கோடி வசூல் செய்த 'தேவரா' !

3 months ago 21

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

ஜூனியர் என்டிஆரின் 30-வது படமான 'தேவரா பாகம்-1' கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்தநிலையில், 2-வது நாளில் உலகளவில் ரூ. 243 கோடி வசூல் செய்தது.

இதற்கிடையில் தேவரா படம் 10 நாட்களில் ரூ. 466 கோடி வசூலை குவித்தது. விரைவில் இப்படம் ரூ.500 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.500 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த பதிவை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

A Sea of Bloodand a Shoreline of Destruction Man of Masses @Tarak9999's Massacre made #Devara cross + &Sending a Notice of being a truly Unstoppable hunt ❤️#BlockbusterDevara pic.twitter.com/p613NQO86j

— Devara (@DevaraMovie) October 13, 2024
Read Entire Article