உலக அளவில் இந்துக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை வேண்டும்: பவன் கல்யாண்

6 months ago 23

அமராவதி,

கனடாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

இந்து கோவில் மீதும் இந்துக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் வேதனை அளிக்கிறது. இது எச்சரிக்கை கொடுக்க கூடியது. கனடா அரசு உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். அங்குள்ள இந்து சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் உலக அளவில் இந்துக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை வேண்டும் 

இது இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்கான அழைப்பு இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அழைப்பு. பிற சமூகங்களுக்கு காட்ட வேண்டிய அதே வேகத்தையும் அர்ப்பணிப்பையும் பாதிக்கப்படும் இந்து சமூகத்திற்கும் உலகம் காட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்

Read Entire Article