உர்வில், பிரேவிஸ் அதிரடி; கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

19 hours ago 5

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே 48 ரன்களும், ரசல் 38 ரன்களும், மணீஷ் பாண்டே 36 ரன்களும் குவித்தனர். சென்னை தரப்பில் நூர் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஆயூஷ், கான்வே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த உர்வில் பட்டேல் 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 8 ரன்னிலும், ஜடேஜா 19 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய பிரேவிஸ், துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய துபே 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது. டோனி 17 ரன்னுடனும், கம்போஜ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Read Entire Article