
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, ஐ.பி.எல். மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில், சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
15.5 ஓவர்களில் 210-க்கு கூடுதலான ரன் இலக்கை அடைந்த விரைவான அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றுள்ளது. 35 பந்துகளில் அதி விரைவாக சதம் அடித்த, இந்திய வீரர் என்ற பெருமையுடன் ஐ.பி.எல். போட்டியில் சர்வதேச அளவில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றார். இது அவருடைய 3-வது ஐ.பி.எல். போட்டி ஆகும்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு 6 வயது இருக்கும்போது, அப்போது இருந்த, தன்னுடைய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் என்ற அணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய வைபவின் புகைப்படம் ஒன்றை, அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா பகிர்ந்துள்ளார்.
அவருடைய ஆதரவுக்காக வைபவுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார். வைபவின் திறனை புகழ்ந்த கோயங்கா, அவருடைய மனவுறுதி, நம்பிக்கை மற்றும் திறமைக்கு தன்னுடைய வணக்கங்கள் என தெரிவித்து கொண்டார்.