உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்திய ரூ.1.91 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

3 hours ago 3

*2 பேர் கைது

பாலக்காடு : கொண்டோட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி காரில் கடத்திய 1 கோடியே 91 லட்சத்து 48 ஆயிரம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து கோழிக்கோடு வழியாக மலப்புரம் நோக்கி வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து சோதனை போட்டுள்ளனர். அதில் பின் சீட்டுக்கு அடியில் சிறப்பு அறைகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகளின் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காரில் வந்த பயணிகளிடம் விசாரணை செய்ததில் மலப்புரம் மாவட்டம் மங்கடாவை சேர்ந்த தஸ்லிம் ஆரிப் (38), மலப்புரம் மாவட்டம் முண்டுபரம்பை சேர்ந்த முகமது ஹனீபா (37) என தெரியவந்தது. இவர்கள் இதுபோன்று அடிகடி காரில் உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் ஹவாலா பணம் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு கடத்தியது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் அளவிற்கு அதிகமான ஹவாலா பணம் கடத்திய இரு நபர்களையும் கொண்டோட்டி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்யயப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்திய ரூ.1.91 கோடி ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article