உரக்கடை பூட்டை உடைத்து ₹47,000 துணிகர திருட்டு

1 month ago 6

கெங்கவல்லி, ஜன.30: சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே வேப்பம்பூண்டிமேடு பகுதியில், இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர், உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில், வழக்கமாக கடையை பூட்டி விட்டு சரவணன் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று காலை கடையை திறப்பதற்காக குமரவேல், அவரது மாமா மணி ஆகியோர் சென்றனர். அப்போது உரக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் இருந்த ₹47,500ஐ மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், எஸ்ஐ தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை மேற்கொண்டனர்.

The post உரக்கடை பூட்டை உடைத்து ₹47,000 துணிகர திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article