மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயீப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மர்ம நபர் ஒருவர் சயீப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தார். சயீப் அலிகான் அந்த நபரை பிடிக்க முயன்ற போது, அலிகானை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் நடிகரின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
இதனால் படுகாயம் அடைந்த சயீப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த நடிகர் சயீப் அலிகான் 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடுதிரும்பினார். சயீப் அலிகானை குத்திய அந்த நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கத்திக்குத்து சம்பத்தின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நடிகர் சயீப் அலிகானை, ஆட்டோ டிரைவர் ஒருவர் மருவத்துவமனையில் அனுமதித்தார். அதற்கான அவர் எந்த பணமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சயீப் அலிகான், துரிதமாக செயல்பட்டு தன் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணா என்பவர் நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.