சென்னை,
சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் ரெயில்வே யார்டில் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.16845) வருகிற 24-ந்தேதி மற்றும் 27-ந்தேதி ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து செங்கேட்டைக்கு இயக்கப்படாது.
செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் (16846) செங்கோட்டையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில் வருகிற 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் கரூரில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்.16321) வருகிற 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர்-கரூர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, அம்பாத்துறை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) கோவையில் இருந்து வருகிற 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கரூர்-விருதுநகர் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரெயில் பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.