உயரப் போகிறதா சிகரெட், செயற்கை குளிர்பானங்கள் விலை?; இறக்கத்துடன் முடிந்த ஐடிசி பங்குச் சந்தைகள்

16 hours ago 1

டெல்லி: சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் செயற்கை குளிர்பானங்களுக்கு ஜிஎஸ்டி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஐடிசி, வருண் பீவேஜர்ஸ் உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்தது. வர்த்தக முடிவில் ஐடிசி நிறுவன பங்குகள் 1 விழுக்காடு குறைந்து ரூ.472 ஆக இறங்கி முடிந்தது. அதே போல் வருண் பீவேஜர்ஸ் நிறுவன பங்குகள் 1 அரை வீழ்க்காட்டிற்கு மேல் குறைந்து ரூ.627 க்கு முடிந்தது.

இதற்கு எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் செயற்கை குளிர்பானங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு ஜிஎஸ்டி 28 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காடாக உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளதே ககாரணமாக கூறப்படுகிறது. முன்னதாக 5,12,18,28 விழுக்காடுகளில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 35 விழுக்காடு வரிப்பிரிவு அமல்படுத்தபட இருப்பதாக தெரியவந்துள்ளது.

The post உயரப் போகிறதா சிகரெட், செயற்கை குளிர்பானங்கள் விலை?; இறக்கத்துடன் முடிந்த ஐடிசி பங்குச் சந்தைகள் appeared first on Dinakaran.

Read Entire Article