துறையூர்,மார்ச் 26: உப்பிலியபுரம் பகுதியில் காணாமல் போன செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அடிக்கடி செல்போன் காணாமல் போனதாக புகார்கள் வந்தது. அவற்றை உடனடியாக எஸ்.ஐ கருப்பண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செல்போன் காணாமல் போனதாக புகார் அளித்த உரிமையாளர்கள் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த நந்தகுமார், ஒக்கரை சேர்ந்த விஸ்வநாதன், கொப்பம்பட்டி சேர்ந்த ஜெயப்பிரியா, புலிவலத்தை சேர்ந்த வேல்முருகன், கோட்டப்பாளையத்தை சேர்ந்த செல்வம், ஒசரப்பள்ளி அன்பரசன், கீரம்பூரைச் சேர்ந்த குமார், மாராடி சேர்ந்த அன்பழகன், குளத்துரை சேர்ந்த பாண்டியன், தண்டலை புதூர் சேர்ந்த சந்தோஷ் ஆகியோரை வரவழைத்து துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன், அவர்களிடம் செல்போனை ஒப்படைத்தார்.
The post உப்பிலியபுரம் பகுதியில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.