கரூர், ஜன. 31: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே செயல்பாடின்றி உள்ள சுகாதார வளாகத்தை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுககு செல்லும் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுககு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.தண்ணீர் வசதி மற்றும் போதிய பராமரிப்பு குறைவு காரணமாக இந்த சுகாதார வளாகம் தற்போது செயல்பாடின்றி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
எனவே, இந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் இநத சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, சுகாதார வளாகத்தை புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post உப்பிடமங்கலம் அருகே சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் appeared first on Dinakaran.