
மும்பை,
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மாவின் அப்பா- அம்மா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா பெயரில் ஸ்டான்ட் திறக்கப்பட்டது தொடர்பாக இந்திய டி20அணியின் கேப்டனும் , மும்பை அணி வீரருமான சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில்,
வாழ்த்துக்கள் ரோகித் சர்மா. பினிஷர் முதல் தொடக்க வீரர் வரை, எங்கள் கேப்டனாக ஒவ்வொரு பாத்திரத்திலும் நீங்கள் ஒரு உத்வேகமாகவும் பெருமையாகவும் இருந்திருக்கிறீர்கள். நான் முன்பு கூறியது போல், நல்லவர்களுக்கு நல்லது நடக்கும், நீங்கள் அதற்கு தகுதியானவர். வான்கடே இப்போது இன்னும் சிறப்பாக உள்ளது . என தெரிவித்துள்ளார் .