
லக்னோ,
உத்தரபிரதேசம் பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில் நேற்று இரவு புயல் ஏற்பட்டது. இந்த புயலின் தாக்கத்தால் மின்மாற்றியில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சில நொடிகளில் கிடுகிடுவென பரவத்தொடங்கியது.
இந்த தீயை கண்ட அப்பகுதி மக்கள் அங்கிம் இங்கும் என தப்பி ஓடினர். இந்த தீயால் அவர்கள் வளர்த்து வந்த கால்நடைகள் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ அந்த கிராமத்தை சுற்றி உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் சுற்றி பரவியது. தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கிராம மக்கள் ஓடியதில் ஒருவர் தீயில் காயமடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தவலறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் சுமார 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.