உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

2 months ago 12
உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. மார்ச்சுலா என்ற இடத்தில் குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலையோரத்தில் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் படுகாயத்துடன் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
Read Entire Article