உத்தர பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த நபர்கள் - கழிவறை ஆசிட்டை குடித்த சிறுமி

3 days ago 3

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் 23-ந்தேதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை 2 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த செயலை வீடியோ எடுத்த அவர்கள், இது குறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வீட்டில் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், இது குறித்து போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read Entire Article