உதவி இயக்குநராக சேர "டிராகன்" இயக்குனர் விதித்த சுவாரஸ்ய நிபந்தனைகள்

2 days ago 3

சென்னை,

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நாயகியாக அறிமுகமான கயாது லோஹர் இந்தப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், அனுபமா, மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலரும் நடித்திருந்தனர். இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.டிராகன் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

டிராகன் படம் வெளியாவதற்கு முன்பு 'காட் ஆப் லவ்' என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவிருப்பதாக அஷ்வத் மாரிமுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். டிராகன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அந்தப் படத்தின் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். சிம்புவின் படம் ஆகஸ்ட் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. இதற்காக, உதவி இயக்குநர்கள் தேவைப்படுவதாக அறிவிப்பை வெளியிட்ட அஷ்வத், தன்னிடம் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், சிபாரிசு கிடையாது. மெரிட் மட்டும்தான்!

உங்களுக்கான இடத்தைப் பெற முதல் மூன்று சுற்றுகளைக் கடக்க வேண்டும்.

முதல் சுற்று உங்கள் சுயவிபரத்தின் அடிப்படையில் அமையும்.

இரண்டாவதில் கொடுக்கப்படும் சூழலுக்கு ஏற்ப காட்சி ஒன்றை எழுத வேண்டும்.

மூன்றாவது என்னுடனான நேரடி நேர்காணல் இருக்கும். வீடியோ கால் அழைப்பு கிடையாது. குறும்படம் எடுத்திருந்தாலோ இலக்கியத்தில் பரந்த வாசிப்பு இருந்தாலோ ஏற்கனவே நீங்கள் என் மதிப்பைப் பெற்றவராகிவிடுவீர்கள்.

டெக்னிக்கல் திறமை வேண்டும்.

நேர்மையாக இருங்கள். நான் ஒரு மோசமான காட்சியைச் சொன்னால் சூப்பர் என சொல்லக் கூடாது!

நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும், வெறும் சினிமா வதந்திகளை மட்டும் அல்ல.

கண்டிப்பாக ஓராண்டு பணியாற்ற வேண்டும். கதை விவாதத்திலிருந்து படம் முடியும்வரை உடன் இருந்தால் மட்டுமே நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

8 பேர்தான் வேண்டும் என்பதால் தேர்வாகவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் வேறு இயக்குநரிடம் வேலைக்குச் சேர இந்த அனுபவம் உதவலாம். கட்டாயமாக பார்ட்டி ஷூ தேவை எனத் தெரிவித்துள்ளார். 

Kindly , Firmly no referral ! Equal opportunity for every aspiring filmmaker ! Waiting to have new talents in team ♥️#teamashwathmarimuthu pic.twitter.com/bMPAPZdHey

— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 31, 2025

அஷ்வத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியதுடன் சினிமா மீதான தயக்கங்களைக் களைவதுபோல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், சம்பளம் தருவீர்களா? என ஒருவர் கேட்டதற்கு, "என் தயாரிப்பு நிறுவனமும் நானும் நல்ல சம்பளம் கொடுப்போம். படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை உதவி இயக்குநர்களின் பங்கு இருக்கும் என்பதால் அவரவரின் பொறுப்பைப் பொறுத்து மாதம்தோறும் நல்ல சம்பளமும் பணிச்சூழலும் இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

My production and i have always made sure we pay the best for the assistant directors based on their position and on time every month ! Since assistants work the most from scratch till end Even after release ! We assure u good salary and work life balance ! Just clear and get… https://t.co/3I0JQvMGP7

— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 31, 2025
Read Entire Article