உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் மதிய உணவு: மேயர் மகேஷ் வழங்கினார்

3 months ago 9

 

நாகர்கோவில், டிச.2: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாகர்கோவிலில் வடசேரியில் மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வருகின்ற சினேகம் ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகபெருமான் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் மனோகரன், ராஜகோபால், பாலமனோகர், சுயம்பு, ராஜசேகரன், ரெத்தினராஜ், கணேசன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், தலைமை செயற்கு உறுப்பினர் சதாசிவம், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ், தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், நகர துணை செயலாளர் வேல்முருகன், அவை தலைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் மதிய உணவு: மேயர் மகேஷ் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article