உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு; ராதாபுரத்தில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

3 months ago 26

ராதாபுரம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக பதவியேற்றதையொட்டி ராதாபுரத்தில் திமுக வர்த்தக அணி நெல்லை மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாட்டில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, நிர்வாகிகள் ஆகியோர் மக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக, ராதாபுரத்தில் உள்ள கலைஞரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, வள்ளியூர் யூனியன் சேர்மன் ராஜா ஞானதிரவியம், ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் கருணாநிதி, நான்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, ராதபுரம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் தனபால், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, மீனவரணி மாநில துணைச் செயலாளர் எரிக் ஜூடு, வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வசூடாமணி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் மல்லிகா அருள், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் முருகன், வர்த்தக அணி மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன், துணை அமைப்பாளர்கள் சபாபதி, சுரேஷ், இளைஞரணி ராதாபுரம் மேற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் ஜெகதீஸ், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அன்றோ சந்தியாகு அக்ஸில், ஆவுடை ஜெயலிங்கம், பிரின்ஸ்டன், கிளைச் செயலாளர்கள் உதயராஜா, தங்கப்பன், குணசேகர், சாகுல் ஹமீது, சந்தோஷ் கலந்துகொண்டனர்.

 

The post உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பு; ராதாபுரத்தில் இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article