உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து

3 months ago 27

சென்னை,

துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சராக பதவியேற்கும் செந்தில் பாலாஜிக்கும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும், கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், சா.மு.நாசருக்கும், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் திரு.கோவி செழியனுக்கும், ராஜேந்திரனுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்!"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத்தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில்,

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கும், கழக… pic.twitter.com/vM11RNSsYX

— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 29, 2024


Read Entire Article