பிரபுதேவாவின் "மூன்வாக்" படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

4 hours ago 2

சென்னை,

தமிழ் திரையுலகில் 1990-களில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' படத்தின் மூலம் இணைந்தார்கள். தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சார கனவு' ஆகிய படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக 'பேட்டராப்', 'ஊர்வசி ஊர்வசி', 'முக்காலா முக்காபுலா', 'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.'ஜென்டில்மேன்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே...' பாடலுக்கு பிரபுதேவா ஆடிய ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

'மின்சார கனவு' படத்துக்கு பிறகு, அதாவது 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் 'மூன்வாக்' என்ற படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவாவின் அசுர ஆட்டம் இடம்பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இசை, நடனம், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து பான் இந்தியா படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இரு ஜாம்பவான்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.

AR Rahman and Prabhu Deva's 'Moonwalk' Worldwide Theatrical Distribution bagged by Romeo Pictures Music by @arrahman Directed by #ManojNSProduced by @behindwoods#DivyaManoj & #PraveenElakWorldwide Distribution by #Raahul, @mynameisraahul@Romeopictures_@PDdancingpic.twitter.com/AFDWwDH6Om

— Behindwoods (@behindwoods) May 12, 2025
Read Entire Article