சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. 5 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. ஈரோடு, கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சென்னை, சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் 100 டிகிரி, திருத்தணி, தர்மபுரி 99 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 98 டிகிரி வெயில் நிலவியது.
The post 3 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் appeared first on Dinakaran.