உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்

1 week ago 2

பெரம்பலூர்,நவ.8: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுக்கா, கல்பாடி(தெற்கு) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா,

பிரம்மதேசம் கிராமத்தில், பெரம்பலூ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, பேரளி(தெற்கு) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) ஜெய தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, ஆதனூர் (வடக்கு) கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார் தலைமையிலும் நாளை (9ஆம்தேதி) சனிக்கிழமை அன்று காலை 10மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொது மக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளை தெரிவித்து, பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்தள்ளார்.

The post உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article