உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம்

8 hours ago 2

சென்னை,

தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஆரம்பித்ததை ஒட்டி, தர்பூசணி விற்பனை படு ஜோராக களைக்கட்டியது. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு சோதனையில் இறங்கினர். அப்போது, அவர்கள் சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.

மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "சென்னை பொறுத்த வரையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு சோதனை செய்துள்ளோம். தமிழகம் உணவு கலப்படம் இல்லாமல் பாதுகாப்பான மண்டலமாக உள்ளது. தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. சென்னையில் எந்த இடத்திலும் தர்பூசணி பழத்தில் செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வரவில்லை. பொதுமக்கள் கவலை இன்றி தர்பூசணி பழத்தை தாராளமாக வாங்கி சாப்பிடலாம். செயற்கை நிறங்கள் கலக்கப்பட்டதாக புகார் வந்தால் அதனை உணவு பாதுகாப்புத் துறை கவனித்துக் கொள்ளும். நமது விவசாயிகள் சிறப்பான முறையில் தர்பூசணி பழங்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்

சென்னையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் சென்னையில் சில இடங்களில் மட்டும் எலி கடித்த பழம், அழுகிய பழங்களை உள்ளிட்டவைகளை மட்டுமே அப்புறப்படுத்தி இருந்தோம். சென்னையில் செயற்கை நிறங்களை கலக்கப்பட்டதாக எந்த பழங்களும் அப்புறப் படுத்தவில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. யாரோ ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ் குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article