உடுமலை : இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைகால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி தலைமை வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின்படியும், துணை இயக்குநர் ராஜேஷ் அறிவுரையின்படி திருப்பூர் வனக்கோட்டத்தில் நேற்று முதல் 17ம் தேதி வரை 8 நாட்கள் கோடைகால புலிகள், இதர மாமிச மற்றும் தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் உடுமலைப்பேட்டை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு ஆகிய வனச்சரகங்களிலுள்ள 34 சுற்றுகளில் இந்த பணியானது நடைபெறுகின்றது. இதில், 53 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் 3 நாட்கள் (11ம் தேதி முதல் 13ம் தேதி வரை) சுற்றுகளிலுள்ள பகுதிகளில் காணப்படும் மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடய கணக்கெடுப்பையும் அடுத்த 3 நாட்கள் (14 முதல் 16 வரை) நேர்கோட்டுப்பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இரைவிலங்குகளையும் (தாவர உண்ணிகள்), அதே பாதையில் திரும்பி வரும் போது ஒவ்வொரு 400 மீட்டர் இடைவெளியில் உள்ள பிளாட்களில் தாவர வகைகளையும் கணக்கெடுக்கப்படுகிறது.
10ம் தேதி கோடைகால புலிகள் கணக்கெடுப்புகள் குறித்து வனப்பணியாளர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக துறை இயக்குநர் ராஜேஷ் தலைமையில், மகேஷ் குமார், உயிரியிலாளரால் சரக வாரியாக பயற்சியானது துணை இயக்குனர் அலுவலகம், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலையில் பயிற்சி அளிக்கப்பட்டு, புலிகள் கணக்கெடுப்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வனப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கோடைகால புலிகள் கணக்கெடுப்புகள் குறித்து வனப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பட்டதை தொடர்ந்து 11ம் தேதி புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகள் தடைய கணக்கெடுப்பு நடைபெறுகிறது.12ம் தேதி புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகள் தடைய கணக்கெடுப்புகள் நடக்கிறது.
13ம் தேதி புலி, சிறுத்தை, பிற ஊனுண்ணி மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகள் தடைய கணக்கெடுப்புகளும், 14ம் தேதி நேர்கோட்டு பாதையில் இரை விலங்குகள் நேரடிக்கணக்கெடுப்புகள், தாவரங்கள், மனித இடையூறுகள் மற்றும் தரை பரப்பு பிளாட் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்தலும் 15ம் தேதி நேர்கோட்டு பாதையில் இரை விலங்குகள் நேரடிக்கணக்கெடுப்புகள், தாவரங்கள், மனித இடையூறுகள் மற்றும் தரை பரப்பு பிளாட் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்தலும் நடக்கிறது.
16ம் தேதி நேர்கோட்டு பாதையில் இரை விலங்குகள் நேரடி கணக்கெடுப்புகள், தாவரங்கள், மனித இடையூறுகள் மற்றும் தரை பரப்பு பிளாட் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்தல் நடக்கிறது.
17ம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்களின் தரவுகளின் விபரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கப்படுகிறது. கோடைகால புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி உடுமலை உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார் கீதா, பயிற்சி உதவி வன பாதுகாவலர், புகழேந்தி வனச்சரக அலுவலர்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
The post உடுமலை அமராவதி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.