உடல் பருமனால் பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா அனுஷ்கா ஷெட்டி?

6 months ago 18

சென்னை,

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த படம் பாகுபலி 2. இப்படத்தில், பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் சாஹோ. ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தை சுஜித் எழுதி இயக்கி இருந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் அனுஷ்கா ஷெட்டிதான் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம். ஆனால், அனுஷ்கா அப்போது பருமனாக இருந்ததால் எவ்வளவோ உடற்பயிற்சி செய்தும் போதுமான அளவு உடல் எடையை குறைக்க முடியாமல் போய்யுள்ளது. இதனால் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article