வெங்காயம் குறைந்த கலோரி உணவாகும். இது நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளதால், எடை இழப்பிற்கு உதவுகிறது. வெங்காய சாலட், வெங்காய சாறு, வெங்காய சூப் போன்ற வழிகளில் வெங்காயத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை எரிக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். ஒருவரின் உணவுப் பழக்கவழக்கங்களும் மோசமான வாழ்க்கை முறையும் அவரது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், எடையைக் குறைக்க உணவில் மாற்றம், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டுள்ளனர். என்னதான் பல முயற்சிகளை செய்தாலும் உடல் எடை மட்டும் குறையவில்லை என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. உடல் எடையை குறைக்க வெங்காயம் முக்கிய பங்கு பெற்றுள்ளது.
* வெங்காய சாலட் எடுத்துக் கொள்ளலாம். பச்சை வெங்காய சாலட் செரிமானத்தை மேம்படுத்தும். வெங்காயத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
* வெறும் வயிற்றில் வெங்காயச் சாறு, எலுமிச்சை சாறு, தேனுடன் கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து கலோரிகள் வேகமாக எரிக்கப்படும்.
* நார்ச்சத்து நிறைந்த வெங்காய சூப்பில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பசியைக் கட்டுப்படுத்தும்.
* வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை தண்ணீரில் பத்து நிமிடங்கள் வேகவைத்து ஆறியதும் அரைத்து வடிகட்டி மீண்டும் குறைந்த தீயில் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து குடிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் உடலை நச்சு நீக்கும். வெங்காயத்தை உணவில் சேர்ப்பதன் மூலம், எளிதாக எடை குறைக்க உதவும். ஆரோக்கியமும் மேம்படும்.
– கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
The post உடல் எடையை கட்டுப்படுத்தும் வெங்காயம் appeared first on Dinakaran.