உடன்குடி,ஜன.12:பொங்கல் திருநாளை முன்னிட்டு உடன்குடி பகுதியில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. உடன்குடி பகுதி விவசாயத்தில் தென்னை விவசாயம் முக்கியமானதாகும். பம்புசெட் விவசாயம் மூலம் மட்டுமே தென்னை நடவு செய்யப்படுகிறது. ஆனால் தினசரி தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை அதனால் விவசாயிகள் தென்னையை விரும்பி பயிரிடுகின்றனர். தேங்காய் சிரட்டையுடன் ஒரு கிலோ ரூ.50 என பல மாதங்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது பொங்கல் மற்றும் முகூர்த்தநாட்களையடுத்து தற்போது கிடுகிடு என உயர்ந்து ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது இதனால் விவசாயிகள மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல இடங்களில் விவசாய நிலங்களை பக்குவப்படுத்தி புதியதாக தென்னங்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். 6மாதம் மற்றும் ஒரு வருடத்தில் மகசூல் தரும் தென்னை மரங்களை அதிகமாக நடவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post உடன்குடியில் தேங்காய் விலை கிடுகிடுஉயர்வு appeared first on Dinakaran.