உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை ஊக்குவிக்கும் - சுனிதா வில்லியம்சுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

1 day ago 3

சென்னை,

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் விண்வெளியில் சாதித்த சுனிதா வில்லியம்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோரின் மீள்தன்மைக்கு எனது சல்யூட்.

குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.

நான்கு பேர் கொண்ட குழு - கிரூவ்9 உங்களை நமது வீட்டிற்கு வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Saluting the resilience of #SunitaWillams & #ButchWilmore
For Surviving unplanned 9 long months in space, facing uncertainty & challenges,

Especially @Astro_Suni ! ✨,
She stood strong—an epitome of courage & determination. Her journey is not just about space exploration… pic.twitter.com/ZyRN7UEOVO

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 19, 2025


Read Entire Article