‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

9 hours ago 1

சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்​கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடு​பட்​ட​வர்​கள் இதில் விண்​ணப்​பிக்​கு​மாறு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: மக்​களின் குறை​களை நேரடி​யாக கேட்​டறி​யும் திட்​டம் தொடங்​கப்​படும் என்று சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து நகர்ப்​புற, ஊரக பகு​தி​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​படு​கிறது. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கு​வது​தான் இதன் நோக்​கம்.

Read Entire Article