இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு!

7 hours ago 4

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பர்மிங்ஹாம் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 427/6 ரன்களும் எடுத்தது. சுப்மன் கில் சதத்தால் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில் 161, ரவீந்திர ஜடேஜா 69*, பந்த் 65, கே.எல்.ராகுல் 55 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 72/3 ரன்களுடன் விளையாடி வருகிறது. இன்று போட்டியின் கடைசி நாள் என்பதால் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ள இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 72/3 கடைசி நாள் ஆட்டமான இன்று மீதம் உள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற இந்தியா அணி தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

 

The post இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article