![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39132847-donald-trump.webp)
வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா- ரஷிய சிறைகைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம் பேசியிருக்கிறார். புதினுடன் பேசியது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் டிரம்ப் கூறியதவாது:- ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன்தான் தொலைபேசி வாயிலாக பேசினான். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்ந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இருநாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம் உக்ரைனுடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.