![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39144346-pm-modi.webp)
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-மேற்குவங்காளத்துக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். ஆனால் சாவு எண்ணிக்கையை உத்தரபிரதேச பா.ஜனதா அரசு சரிவர வெளியிடவில்லை. பலியானோர் எண்ணிக்கையை மறைக்கிறது' இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.