கீவ்: உக்ரைன் நகரமான சுமி மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். 99 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனில் உள்ள சுமி நகரின் மைய பகுதியில் குருத்தோலை ஞாயிறு தினத்தை கொண்டாட நேற்று ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது நகரின் மைய பகுதியை குறிவைத்து ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில், 2 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர். 11 சிறுவர்கள் உட்பட 99 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி,‘‘ சுமி பகுதியில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு சர்வதேச அளவிலான பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் ஏவுகணைகள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.தீவிரவாதிகள் போல் செயல்பட்டு வரும் ரஷ்யாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் தான் இதற்கு தீர்வு ஏற்படும்’’ என்றார். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post உக்ரைன் நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலில் 32 பேர் பலி appeared first on Dinakaran.