உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டல்

3 hours ago 1

லக்னோ,

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையின் பெயரான சிந்தூரை பலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக சூட்டியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்களில் உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்துள்ளனர்.

Read Entire Article