உ.பி.: காது கேளாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

2 months ago 13

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி வீட்டில் தனியாக இருந்த காது கேளாத 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 42 வயதுடைய மனோகர் ராய்க்வார் என்பவர் கடந்த 20ம் தேதி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மனோகர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், நேற்று மனோகர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் லலித்பூர் காவல் கண்காணிப்பாளர் முகமது முஷ்தாக் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Read Entire Article