உ.பி.: கல்லூரி மாணவியை கடத்தி பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை

4 months ago 27

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரர் என்றும், அவரது கூட்டாளி ஒருவரின் உதவியுடன் மாணவியை கடத்தி சென்றுள்ளார். மேலும் இந்த சம்பவம் திங்கட்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு மாணவி வெளியேறிய போது நடந்துள்ளது. கல்லூரிக்கு செல்லும் போது, இம்ரான் கானும், அடையாளம் தெரியாத நபரும் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த ஆட்டோவில் ஏறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ஆட்டோவில் ஏறிய பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் ஆட்டோ டிரைவரின் வழியை மாற்றச் செய்து, வலுக்கட்டாயமாக என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த இடத்தில் இருந்த ஆட்டோ டிரைவரும், மற்றொருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் எப்படியோ இம்ரான் கானின் பிடியில் இருந்து தப்பித்து, கிருஷ்ணா நகர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இம்ரான் கானை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக, கிருஷ்ணா நகர் காவல் உதவி ஆணையர் வினய் குமார் திவேதி கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், இம்ரான் கான், தெரியாத நபர் மற்றும் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.

Read Entire Article