உ.பி. எல்லையில் ராகுல், பிரியங்கா தடுத்துநிறுத்தம்.. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக குற்றச்சாட்டு..!!

11 hours ago 1

லக்னோ: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் உ.பி. பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி குற்றச்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் இருந்த ஹரிஹர் இந்து கோயிலை இடித்து விட்டு ஜமா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் கள ஆய்வுக்கு சென்றபோது வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் கலவரம் நீடிப்பதால் அங்கு அமைதி, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக வௌியாட்கள் நுழைய இம்மாதம் 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று செல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து டெல்லியில் இருந்து கார் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு புறப்பட்டனர். ஆனால் டெல்லி , உத்தரபிரதேச எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் காங்கிரசார் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மேலும், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உ.பி. எல்லையிலேயே ஒன்றரை மணி நேரமாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் திரண்டுள்ளவர்கள் மத்தியில் ராகுல் காந்தி, பிரியங்கா உரையாற்றினர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் உ.பி. பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக ராகுல், பிரியங்கா குற்றச்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வது ராகுல் காந்தியின் அரசியல் சட்ட உரிமை என்றும், சம்பல் நகருக்கு செல்ல ராகுல் காந்தியை அனுமதித்திருக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

The post உ.பி. எல்லையில் ராகுல், பிரியங்கா தடுத்துநிறுத்தம்.. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவிடாமல் பா.ஜ.க. அரசு தங்களை தடுப்பதாக குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Read Entire Article