உ.பி.: இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

1 month ago 7

வாரணாசி,

உத்தர பிரதேசத்தில் வாரணாசி நகரின் வடக்கே லால்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மார்ச் 29-ந்தேதி தோழியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். தோழியை சந்தித்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அவருடைய குடும்பத்தினர் கடந்த 4-ந்தேதி போலீசில் புகார் அளித்தனர். அதே நாளில் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, கும்பல் பலாத்காரம் செய்து பாண்டேப்பூர் பகுதியில் கடத்தல்காரர்கள் விட்டு சென்றனர்.

அவர் எப்படியோ அருகேயுள்ள தோழி ஒருவரின் வீட்டை அடைந்திருக்கிறார். இதன்பின்னர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடைய தந்தையிடம் நடந்த விவரங்களை கூறியிருக்கிறார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த இளம்பெண்ணை ஹூக்கா பார், ஓட்டல், விடுதி மற்றும் விருந்தினர் இல்லம் என பல இடங்களுக்கு கடத்தி சென்றுள்ளனர். பல்வேறு நபர்கள் இதில் தொடர்பில் உள்ளனர். 22 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், ஹகுல்கஞ்ச் மற்றும் லல்லாபுரா பகுதிகளை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்களை காவலில் எடுத்துள்ளனர். எனினும், அவர்களில் சிலர் சிறுவர்களாக இருக்க கூடும் என்பதற்காக பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீசார் தயக்கம் காட்டினர்.

தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ பாலியல் புகாரை அளிக்கவில்லை என மூத்த காவல் அதிகாரி சந்திரகாந்த மீனா கூறினார். பாலியல் வன்கொடுமை புகார் நேற்று அளிக்கப்பட்டது என அவர் நிருபர்களிடம் கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article