‘ஈறு வலுவாகும் டூத்பேஸ்ட்’ விக்கோ வஜ்ரதந்தி புது விளம்பர உத்தி

1 month ago 4

சென்னை: விக்கோ வஜ்ரதந்தி நிறுவனம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் விக்கோ வஜ்ரதந்தி டூத்பேஸ், ஆயுர்வேத அடிப்படையிலான டூத்பேஸ்ட் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. தற்போது, புதிய பிரசார உத்தியை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள நுகர்வோரிடம் விக்கோ பற்பசையை பிரபலப்படுத்தும் வகையில், நடிகை ரேவதி இடம்பெற்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

வோம்ப் என்ற நிறுவனம் தயாரித்த இந்த விளம்பரத்தில், பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு பற்பசையுடன் தோன்றுகிறார். தான் வைத்துள்ள டூத்பேஸ்ட் சுவையாகவும், நுரை அதிகம் வருவதாகவும் உள்ளது. ஆனால், ஈறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்கிறார். அப்போது நடிகை ரேவதி, ‘ஈறு பிரச்னையை போக்கும் நாட்டின் மிகச்சிறந்த நிபுணர்’ என விக்கோ வஜ்ரதந்தி டூத்பேஸ்டை அறிமுகம் செய்கிறார். ஈறு வலுவிழத்தல், ரத்தம் வடிதல், வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு விக்கோ வஜ்ரதந்தி தீர்வு தருகிறது என இந்த விளம்பரத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து விக்கோ லேபரட்டரீஸ் இயக்குநர் தேவேஷ் பென்டார்கர் கூறுகையில், ‘‘ஆயுர்வேத பற்பசைகளில், விக்கோ வஜ்ரதந்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையைப் பெற்ற பிராண்ட். ஈறு பிரச்னைகளுக்கு எளிதான, சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பதுதான் இந்த விளம்பரத்தின் தெளிவான செய்தி. தனித்தன்மை வாய்ந்த பார்முலாவில் தயாரிக்கப்பட்ட இந்த பற்பசை ஈறு ஆரோக்கியத்துக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வாகும்’’ என்றார். ‘‘விக்கோ வஜ்ரதந்தி நிறுவனம் முதன் முறையாக நகைச்சுவை உணர்வுடன் வெளியிட்ட விளம்பரம் இது’’ என வோம்ப் நிறுவன சிஓஓ, தாவல் ஜத்வானி கூறினார்.

The post ‘ஈறு வலுவாகும் டூத்பேஸ்ட்’ விக்கோ வஜ்ரதந்தி புது விளம்பர உத்தி appeared first on Dinakaran.

Read Entire Article