ஈரோடு மீன் மார்க்கெட்டில் வெள்ளை வாவல் கிலோ ரூ.1,200க்கு விற்பனை

3 weeks ago 6

ஈரோடு, அக்.28: ஈரோடு மீன் மார்க்கெட்டில் நேற்று வெள்ளை வாவல் மீன் கிலோ ரூ.1,200க்கு விற்பனையானது. ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு நாள் ஒன்றுக்கு 25 டன் எடையிலான மீன்கள் வரத்தாகின்றன. கடந்த வாரம் மார்க்கெட்டிற்கு 35 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன. நேற்றும் ஸ்டோனி பிரிட்ஜ் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. காரைக்கால், ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் 30 டன் மீன்கள் வரத்தாகி இருந்தன.

அதிகாலை முதலே வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பெரிய மீன்களின் விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. சிறிய மீன்கள் கிலோவுக்கு ரூ.50 வரை விலை உயர்ந்து விற்பனையாகின. மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:
வஞ்சிரம் ரூ.850, கடல் அவுரி ரூ.700, பாறை ரூ.500, கனவா ரூ.400, சங்கரா ரூ.350, வெள்ளை வாவல் ரூ.1,200, கருப்பு வாவல் ரூ.700, முரல் ரூ.450, விளா மீன் ரூ.500, டுயானா ரூ.650, மயில் மீன் ரூ.700, இறால் ரூ.700, ப்ளூ நண்டு ரூ.750, மத்தி ரூ.300, அயிலை ரூ.250, தேங்காய் பாறை ரூ.500, திருக்கை ரூ.400, கிளி மீன் ரூ.600 .

The post ஈரோடு மீன் மார்க்கெட்டில் வெள்ளை வாவல் கிலோ ரூ.1,200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article