ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

4 months ago 12

 

ஈரோடு, பிப்.17: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்களும், அணை மீன்களும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் 15 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் நேற்று 10 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. வரத்து குறைவு எதிரொலியாக கடந்த வாரத்தை விட நேற்று சில மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சரம் ரூ.950க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.150ஆக அதிகரித்து, ரூ.1,100க்கு விற்பனையானது. இதேபோன்று, கடந்த வாரம் வெள்ளை வாவல் கிலோ ரூ.1,100க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.1,200க்கு விற்பனையானது. கடந்த வாரம் கனவா மீன் ஒரு கிலோ ரூ.400க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.500க்கு விற்கப்பட்டது.

மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு: கருப்பு வாவல் ரூ.850, கடல் அவுரி ரூ.750, முரல் ரூ.400, கடல் பாறை ரூ.550, சங்கரா ரூ.400, விளாமின் ரூ.550, டுயானா ரூ.750, கிளி மீன் ரூ.650, மயில் மீன் ரூ.700, ப்ளூ நண்டு ரூ.700, பெரிய இறால் ரூ.700, சின்ன இறால் ரூ.500, தேங்காய் பாறை ரூ.550, திருக்கை ரூ.350, கொடுவா ரூ.800, ரெட் சால் ரூ.750, சால்மோன் ரூ.800, மத்தி ரூ.250, அயிலை ரூ.300.

The post ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article