ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

3 hours ago 2

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பனிக்காலம் தொடங்கியது. பனிக்காலத்தில் அதிகாலை நேரங்களில், சாலைகளில் மூடுபனி தென்பட்டது. பொது மக்களுக்கு இதமான சூழலும் நிலவியது. தற்போது, பனிக்காலம் ஓய்ந்து, வெயில் காலம் தொடங்கி விட்டது.

இந்த நிலையில், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெயில் இன்று சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, ஈரோட்டில் 103 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 102 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 101 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூரில் 101 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read Entire Article