
ஈரோடு ,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56108) காலை 06.00 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்படும். இந்த ரெயில் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை வரை மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56107) பிற்பகல் 2.45 மணிக்கு ஜோலார்பேட்டையிலிருந்து புறப்படும். இந்த ரெயில் ஜூலை 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.