ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நாளை (பிப்.5) நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (பிப்.5) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.