ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி: 27ம் தேதி நடக்கிறது

7 hours ago 1

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக சார்பில் விசி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த வாரம் கணினி சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று 2வது கட்டமாக கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை, தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஒதுக்கீடு செய்தார்.

இதில், கிழக்கு தொகுதியில் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 237 வாக்குச்சாவடிகள், கூடுதலாக 20 சதவீதம் வாக்குச்சாவடிகள் சேர்த்து 284 முதன்மை அலுவலர், முதல் நிலை அலுவலர், 2ம் நிலை அலுவலர், 3ம் நிலை அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக, 4ம் நிலை அலுவலர்கள் என 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு கடந்த 19ம் தேதி முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது 2ம் கட்ட பணி ஒதுக்கீட்டை தொடர்ந்து, வரும் 27ம் தேதி (திங்கள்) ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார் (ஆர்ஏஎன்எம்) கலை அறிவியல் கல்லூரியில் 2ம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி: 27ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article